புவிவெப்பமயமாதல்
இந்த வார்த்தை நம் பள்ளி காலங்களில் கேள்வி பட்ட மாதிரி இருக்கே என தோன்றலாம். பள்ளியில் படிக்கும்போது மட்டுமல்ல இப்போதும் நாம் இந்த பூமியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முதலில் பூமி வெப்பமயமாதல் என்றாள் என்ன என்பதை பார்ப்போம். நிறைய தொழிற்சாலைகளின் புகைகளும், வாகன புகைகளும், காடுகளின் விரிவாக்கம் இல்லாமல் குறைந்து கொண்டே செல்வதும் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு என பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் தேவைதானே என்று நினைக்கலாம் தேவைதான். ஆனால் அவற்றின் மாசுகளையும் கழிவையும் சரிவர சுத்திகரிக்காமல் விடுவதும் பல மரங்களை வெட்டுவதும் தான் காரணம். சமீபத்திய ஆராய்ச்சியில் 150 வருடங்களுக்கு முன் 14 சென்டிகிரேட் இருந்த சராசரி வெப்பம் தற்போது 15 சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது 16 தொடும் போது பல விபரீதங்கள் ஏற்படும்.
இந்த மாறுதலால் தான் வருடாவருடம் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது மூன்று மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் பெய்கிறது. உதாரணம் சென்னையின் 2015 பெருவெள்ளம் .நம் ஊரில் மட்டுமல்ல பல நாடுகளில் இவ்வாறு பெய்கிறது. புயல்களின் தாக்கம் அதிகரிக்கிறது. நம் ஊரில் கஜா புயலும், அதைவிட பெரிய சூறாவளி புயல் பிலிப்பைன்சில் சூப்பர் டைபூன் தாக்கியிருக்கிறது. இந்த புயல்களினால் மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் இயற்கையான மரங்களையும் பாதிக்கிறது. பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கிறது. வரும் வருடங்களில் 2030க்குள் இந்த பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நாடுகளும் முடிவு எடுத்துள்ளன. நாமும் நம்மால் இயன்ற அளவு பங்களிக்க வேண்டும்.
நம் முற்கால அரசனான பாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்கு தீர்வானது ஒரு குறிப்பிட்ட மரத்தினை வெட்டி அதன் நடுவில் இருக்கும் பகுதியை காய்ச்சி குடித்தாள் சரியாகும் என வைத்தியர் கூறினார். அதற்கு பாரி மன்னன் ஒரு மரத்தின் இலை வைத்து குணமாக்கினாள் ஆக்குங்கள் அல்லது ஒரு மரத்தின் கிளை வைத்து குணமாக்கினாள் என்னை குணமாக்குங்கள். அதைவிடுத்து ஒரு மரத்தை முழுமையாக அழித்துதான் நான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதற்கு நான் செத்து அந்த மரம் உயிர் வாழட்டும் என்று கூறினார். இந்த நிகழ்வானது நம் முன்னோர்கள் இயற்கையின் மீது எவ்வளவு அன்புடன் இருந்தார்கள் என்பது புரிகிறது . நாம் ஒரு மரத்தை வெட்டும் சூழல் ஏற்பட்டால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நடவேண்டும். விதைப்பந்து விதை+ உரம்+ மண் சேர்ந்த பந்தினை தூவவேண்டும். ஆலைகளின் சுத்திகரிப்பு சரிவர நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். நம் வீட்டில் உபயோகிக்கும் வாகனங்கள் அதிகப்படியான புகையினை வெளியிடுகிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். நாமே இவ்வளவு விளைவுகளையும் பருவநிலை மாற்றங்களையும் சந்தித்தால் நமக்கு பின்வரும் சந்ததியின் நிலை குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். சிந்தித்து செயல்படுவோம்.



Good post for current situation....
ReplyDeleteThank u for the encouragement
ReplyDeleteKeep it up...! Good post waiting for more post from u..!
ReplyDeleteThank you definitely.
ReplyDelete