உமைத் பவன்(umaidh bhawan)

உலகிலேயே விலை உயர்ந்த மற்றும் மிகப்பெரிய ஹோட்டல் நம்மூரில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா?ஆம்! உமைத் பவன் எனும் இந்த அரண்மனை அதாவது தற்போது ஹோட்டல் 2016 இல் உலகின் விலை உயர்ந்த ஹோட்டல்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்த அழகிய அரண்மனை காணப்படுகிறது. இந்த அரண்மனை அதனை உருவாக்கிய உமைத் சிங் என்ற ராஜாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த அழகிய அரண்மனை சித்தார் மலைமீது அமைந்திருப்பதால் சித்தார் அரண்மனை என்றும் கூறுகின்றனர். இந்த அரண்மனை art techo பாணியில் 1928 தொடங்கி 1940 இல் முடித்தனர். இந்த ஹோட்டலை அதாவது அரண்மனையை வடிவமைத்தவர் ஹென்றி எனும் ஆங்கிலேய வடிவமைப்பாளர்(builder). இவர்தான் நம் நாட்டின் குடியரசுத் தலைவரின் மாளிகையை வடிவமைத்தவர். இந்த அரண்மனையின் சிறப்பு அம்சம் என்னவெனில் கற்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டு சுண்ணாம்பு கலவை பூசாமலே கட்டப்பட்டுள்ளது.
இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளையும் நம் நாட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதி பாரம்பரிய விடுதியாகவும்(hotel) ,மற்றொரு பகுதி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் அருங்காட்சியகமாகவும்(museum) செயல்படுகிறது. இந்த ஹோட்டலில் 347 அறைகளும் அரச பரம்பரை தங்குவதற்காக தனி இடமும் இருக்கிறது. இந்த அரண்மனை 26 ஏக்கரில் வண்ண பூந்தோட்டங்கள் உடனும் காட்டு மயில் களுடனும் மிகப்பெரிய நீச்சல் குளத்துடனும் கண்களை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.
இந்த அரண்மனையில் ஒரு நாள் தங்குவதற்கு ஒரு அறைக்கு 1,50,000₹ வசூலிக்கப்படுகிறது. இந்த அரண்மனைக்கு செல்லும் ஒவ்வொரு விருந்தினரும் மேளதாளத்துடன் மாலை அணிவித்து திலகமிட்டு வரவேற்கின்றனர் ஒவ்வொரு பயணியும் தன்னை ஒரு மகாராஜாவாக பாவித்துக் கொள்ளும் அளவிற்கு உபசரிப்புகள் பலமாகவும் ராஜஸ்தானின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நடனத்துடனும் வரவேற்கப்படுகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற உலக அழகியான பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ்(nick jonas) திருமணம் இங்குதான் நடைபெற்றது. இந்தியாவின் பழமையான பழமொழியான அதிதி தேவோ பவோ( விருந்தினர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்) என்பதன் அர்த்தத்தை இங்கே காணலாம். ராஜஸ்தான் ஒரு பாலைவன பூமி மட்டுமல்ல அது பல அரண்மனைகளையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு அழகிய இடமுமாகும்.

உலகிலேயே விலை உயர்ந்த மற்றும் மிகப்பெரிய ஹோட்டல் நம்மூரில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா?ஆம்! உமைத் பவன் எனும் இந்த அரண்மனை அதாவது தற்போது ஹோட்டல் 2016 இல் உலகின் விலை உயர்ந்த ஹோட்டல்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்த அழகிய அரண்மனை காணப்படுகிறது. இந்த அரண்மனை அதனை உருவாக்கிய உமைத் சிங் என்ற ராஜாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த அழகிய அரண்மனை சித்தார் மலைமீது அமைந்திருப்பதால் சித்தார் அரண்மனை என்றும் கூறுகின்றனர். இந்த அரண்மனை art techo பாணியில் 1928 தொடங்கி 1940 இல் முடித்தனர். இந்த ஹோட்டலை அதாவது அரண்மனையை வடிவமைத்தவர் ஹென்றி எனும் ஆங்கிலேய வடிவமைப்பாளர்(builder). இவர்தான் நம் நாட்டின் குடியரசுத் தலைவரின் மாளிகையை வடிவமைத்தவர். இந்த அரண்மனையின் சிறப்பு அம்சம் என்னவெனில் கற்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டு சுண்ணாம்பு கலவை பூசாமலே கட்டப்பட்டுள்ளது.
இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளையும் நம் நாட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதி பாரம்பரிய விடுதியாகவும்(hotel) ,மற்றொரு பகுதி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் அருங்காட்சியகமாகவும்(museum) செயல்படுகிறது. இந்த ஹோட்டலில் 347 அறைகளும் அரச பரம்பரை தங்குவதற்காக தனி இடமும் இருக்கிறது. இந்த அரண்மனை 26 ஏக்கரில் வண்ண பூந்தோட்டங்கள் உடனும் காட்டு மயில் களுடனும் மிகப்பெரிய நீச்சல் குளத்துடனும் கண்களை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

No comments:
Post a Comment