Wednesday, November 21, 2018

வீராங்கனை

             
 நண்பர்களே இது என் முதல் பதிவு.என் முதல் பதிவில் பெண்மையின் பெருமை பற்றி பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி 😊.
அந்த காலத்தில் பெண் ராணிகள் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் குதிரை
 மீது ஏறி வாள் ஏந்தி போர் புரிந்ததை பேசி வியந்து இருக்கிறோம்...
இக்காலத்தில் நம்மிடையே வாழும் பல பெண்களில் ஒரு பெண்ணின் சவால் மிகுந்த வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம்... இவர் செய்யும் வேலை மட்டும் அல்ல. வேலை செய்யும் இடமே சவால் நிறைந்ததுதான்...                               

டெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி ட்ரான்ஸ்போர்ட்டில் டிரக்(truck) பழுது பார்க்கும் வேலை செய்யும் முதல் இந்தியா பெண் இவர் தான்...சாந்தி தேவி எனும் இவர் 58 வயதில் டிரக் மெக்கானிக் வேலை செய்கிறார்...
ஆட்டோ டிரைவிங் ,தையல் வேலைகள் செய்து சரி வராததால் தன் கணவருடன் சேர்ந்து மெக்கானிக் கடை வைக்கிறார்.
கணவரின் உதவையாளராக இருந்து பின் தனியாகவே இதை செய்யும் அளவு முன்னேறி இருக்கிறார்.ஒரு டயர் எடை 50kg .இவரது தொழில் நேர்த்தியை கண்டு பல டிரக் ட்ரைவர்கள் இவரையே தேடி வருகின்றனர் ..பல கல்லூரிகளில் உரையாடவும் இவரை அழைக்கின்றனர்.
சவால்களை எதிர்கொள்வது எப்படி என்று....!இவரும் ஒரு வீராங்கனை தானே...!👍

No comments:

Post a Comment